தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் – சன்ரைசர்ஸ் வீரர் சகா வலியுறுத்தல்

ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொல்கத்தா அணிக்காக விளையாடிய வருண் சக்ரவர்த்தி உள்பட இருவர் பாதிக்கப்பட்டனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சகாவிற்கு மே 4-ந்தேதி கொரோனா தொற்று உறுதியானது. அன்றைய தினமே ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

சகா தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். இன்று அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் பாசிட்டிவ் வந்ததாக செய்தி வெளியானது.

இந்த நிலையில் சாக விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘‘என்னுடைய கோரண்டடைன் காலம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. வழக்கமான பரிசோதனையில், இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒன்று நெகட்டிவ் எனவும், மற்றொன்று பாசிட்டிவ் எனவும் முடிவு வந்தது. மாற்றாக நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். முழுமையான தொகுப்பு இல்லாமல் தகவல்கள் மற்றும் செய்திகளை தவறாக பரப்ப வேண்டாம்’’  எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools