அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து 2017-ம் ஆண்டு வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் பெரிதாக பேசப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன.
மெர்சல் படத்தில் இடம் பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்…’ பாடலை மட்டும் உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். விஜய் கதாநாயகன், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளர் என்பதால் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து ‘மெர்சல்’ படத்தின் ஆடியோ உரிமை வாங்கப்பட்டது.
அடுத்து விஜய், ஏ.ஆர்.ரகுமான், அட்லி என இதே கூட்டணியில் ‘விஜய் 63’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதற்காக ஐந்துகோடி சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.
’விஜய் 63’ படத்துக்கான ஆடியோ உரிமையை விற்று அந்த பணத்தை அப்படியே ஏ.ஆர்.ரகுமானுக்கு சம்பளமாக கொடுத்துவிட தீர்மானித்து ஆடியோ உரிமைக்கு ரூ.5 கோடி விலையாக நிர்ணயித்து இருப்பதாக தகவல் வந்துள்ளது. இருந்தாலும் இந்த உரிமையை வாங்க போட்டி நடக்கிறது.
தற்போது விஜய் படத்துக்கான பாடல் ரெக்கார்டிங் தொடங்கி இருக்கிறது.