தல என்று அழைக்கும் ரசிகர்கள்! – மகிழ்ச்சி தெரிவித்த டோனி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி தனியார் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘நல்ல மனிதராக, நல்ல கிரிக்கெட் வீரராக கடினமான சூழ்நிலையை களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எப்படி சமாளிப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்களில் என்னை மேம்படுத்தி கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உதவியது.

நன்றாக விளையாடும்போது எப்படி தன்னடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் என்னை ‘தல’ என்று தான் அழைக்கிறார்கள். அதனை நான் சிறப்பானதாக உணருகிறேன். ‘தல’ என்றால் சகோதரன் என்று அர்த்தம். அவர்கள் அவ்வாறு அழைக்கும்போது என் மீது வைத்து இருக்கும் அளவு கடந்த அன்பையும், பாசத்தையும் பிரதிபலிப்பதாக உணருகிறேன்.

நான் சென்னையில் இருந்தாலும் சரி அல்லது மற்ற தென்இந்திய பகுதிகளுக்கு சென்றாலும் சரி அவர்கள் என் பெயரை சொல்லி அழைப்பது கிடையாது. ‘தல’ என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த மாதிரி அழைப்பவர்கள் அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள்’ என்று தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news