தலைமை அலுவலகம் தாக்குதல் – மாநிலம் தழுவிய பந்த் அறிவித்த தெலுங்கு தேசம் கட்சி
ஆந்திர மாநிலம் மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைமை அலுவலகம் நேற்று சூறையாடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தெலுங்கு தேசம் கட்சி இன்று மாநிலம் தழுவிய பந்த் அறிவித்தது.
அதன்படி இன்று காலையில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியின் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.