உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இமாசல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் உலக கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதற்கிடையே, நியூசிலாந்து அணியினர் இன்று காலை தரம்சாலா சென்றடைந்தனர். இந்நிலையில், தரம்சாலாவில் தங்கியுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இன்று தங்களது குடும்பத்தினருடன் சென்று புத்தமத துறவியான தலாய் லாமாவை சந்தித்தனர். அவரிடம் ஆசி பெற்றனர். இந்த போட்டோவை தலாய் லாமா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.