Tamilசெய்திகள்

தலாய்லாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

திபெத்தியர்களின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவின் 87வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தலாய் லாமாவை தொடர்புக்கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

திபெத்தியர்களின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவின் 87வது பிறந்தநாள் முன்னிட்டு முன்னதாக அவரைத் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தேன். அவரது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான தலாய் லாமா, 1959 ஆம் ஆண்டு சீனாவைவிட்டு வெளியேறி இந்தியாவில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.