X

தற்போதைக்கு அந்த்ரே ரஸல் தான் சிறந்த ஆல் ரவுண்டர் – ரிங்கு சிங் கருத்து

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அந்த்ரே ரஸல் 2014-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஆந்த்ரே ரஸல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 14 ஆட்டங்களில் 510 ரன்கள் குவித்தர். ஸ்டிரைக் ரேட் 204.81 ஆகும். அத்துடன் 11 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்நிலையில் தற்போதைய நிலையில் அந்த்ரே ரஸலை விட சிறந்த ஆல்-ரவுண்டர் யாரும் இல்லை என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் வீரர ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரிங்கு சிங் கூறுகையில் ‘‘அந்த்ரே ரஸல் போன்று யாராலும் பந்தை சிறப்பாக அடிக்க முடியாது. அவரிடம் அதிகமான வலிமை உள்ளது. அவருடைய சிக்ஸ் மிகப்பெரியதாக இருக்கும். அவருடன் போட்டியிடும் அளவிற்கு மற்ற பேட்ஸ்மேன்களை என்னால் பார்க்க முடியவில்லை. தற்போதைய நிலையில் அவர்தான் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்.

அவருடன் இணைந்து விளையாடினாலும் அதிகமாக பேசியது கிடையாது. ஏனென்றால், எனக்கு ஆங்கிலம் எளிதாக பேச வராது. ஆனால், வீரர்கள் அறையில் அவரது பிறந்த நாளை சந்தோசமாக கொண்டாடினோம். விருந்தில் கலந்து கொண்டு ஆட்டம் போட்டோம்’’ என்றார்.