தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகையை காப்பாற்றிய நடிகர் சுதீப்
கன்னடத்தில் இளம் நடிகையாக அறியப்படுபவர் ஜெயஸ்ரீ ராமையா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு கன்னட பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். கன்னட கொத்திலா, உப்பு குலி காரா ஆகிய படங்களிலும் ஜெயஸ்ரீ ராமையா நடித்து இருந்தார்.
இந்த நிலையில் ஜெயஸ்ரீ ராமையா தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் நான் மனசோர்வாக உள்ளேன். இந்த உலகத்தில் இருந்து விடைபெறுகிறேன் என்று கூறியிருந்தார். இந்த பதிவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஜெயஸ்ரீ ராமையா தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கிவிட்டார். பின்னர் மற்றொரு பதிவில், மிக்க நன்றி சுதீப் சார். உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் என்னை காப்பாற்றியதற்காக நன்றி. உங்களை பீதிக்குள்ளாக்கியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்று தெரிவித்தார். அவரது இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.