‘தர்பார்’ படத்தை பிரம்மாண்டமாக கொண்டாட ரஜினி ரசிகர்கள் திட்டம்!

ரஜினி நடித்த தர்பார் படம் வருகிற 9-ந்தேதி வெளிவருகிறது. பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு வெளிவருவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதை கொண்டாட இப்போதே உற்சாகமாகி விட்டார்கள். சேலம் மாவட்டம் ரசிகர்கள் தர்பார் படம் திரையிடப்படும், தியேட்டர் மற்றும் கட்அவுட் மீது ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கேட்டிருக்கிறார்கள்.

சேலம் மாவட்டம் பாப்பரபட்டியை சேர்ந்த கனகராஜ் என்பவர் சேலம் மேற்கு மாவட்டம் மெய்யனூரில் உள்ள ஏஆர்ஆர்எஸ் என்ற தியேட்டரில் ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கேட்டிருக்கிறார்.

இது தொடர்பாக சேலம் வருவாய் கோட்டாட்சியர், சேலம் மேற்கு வட்டாட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மனுதாரர் கனகராஜ் ஹெலிகாப்டரில் மலர் தூவ கேட்டுள்ள இடத்தை பார்வையிட்டு விரிவான அறிக்கை அனுப்பு மாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். வட்டாட்சியிரின் அறிக்கை அடிப்படையில் அனுமதி வழங்கப்படுமா? மறுக்கப்படுமா? என்பது தெரிய வரும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools