X

‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறார்கள்.

‘தர்பார்’ படத்தின் முதல் பாதியில் சமூக சேவகராகவும், இரண்டாம் பாதியில் அதிரடி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் ரஜினி. ஏற்கனவே, ‘மூன்று முகம்‘ படத்தில் ரஜினி நடித்திருந்த அலெக்ஸ் பாண்டியன் வேடம் பிரமாதமாகப் பேசப்பட்டது.

இப்போது, அலெக்ஸ் பாண்டியன் வேடத்தையே மிஞ்சும் விதமாக ‘தர்பார்’ படத்தில் இடம் பெறும் போலீஸ் அதிகாரி கேரக்டர், பிரமாதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். வழக்கமாக, தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் நடிப்புக்காக தனிமையில் ஹோம் ஒர்க் செய்வது ரஜினியின் வழக்கம். அதுபோல இந்த படத்துக்கும் பல வகையான நடிப்பு பயிற்சிகளை எடுத்துக்கொள்கிறாராம் ரஜினி.