தரை விரிப்பில் பொற்கோவில் புகைப்படம்! – ஆன்லைன் நிறுவனத்திற்கு சீக்கியர்கள் எதிர்ப்பு

பிரபல ஆன்-லைன் விற்பனை நிறுவனம் அமேசான். இந்த நிறுவனம் மூலம், விற்பனை செய்யப்பட்ட தரை விரிப்புகளில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததாக தெரிகிறது.

இது சீக்கியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து அமெரிக்காவை சேர்ந்த சீக்கியர்கள் கூட்டமைப்பு அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியது.

அதில், இதுபோன்று ஆட்சேபனைக்குரிய பொருட்களை விற்பனை செய்ய நிரந்தர தடைவிதிக்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என உறுதி அளிக்க வேண்டும் என்றும் அமேசான் நிறுவனத்துக்கு சீக்கியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சீக்கியர்கள் ஆட்சேபனை தெரிவித்த சில மணி நேரத்தில் சர்ச்சைக்குரிய அந்த பொருட்கள் அமேசான் விற்பனை தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools