ஸ்பெயின் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர் ரபெல் நடால். கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஜுயன் மார்ட்டின் டெல் போட்ரோவை எதிர்த்து விளையாடினார். அப்போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உடனடியாக போடடியில் இருந்து விலகினார்.
அதன்பின் நவம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டோர். தற்போது பயிற்சியை தொடங்கியுள்ளார். உலக டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் நடால், “தரவரிசை முக்கியமல்ல, உடல் நலம்தான் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
காயம் குணமாகி கடந்த வாரம் அபு தாபியில் நடைபெற்ற கண்காட்சி போட்டியில் பங்கேற்றார். தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனிடம் தோல்வியைத் தழுவினார்.