X

தரமான படங்களில் மட்டுமே நடிப்பேன் – பிரியா ஆனந்த் திடீர் முடிவு

வாமனன் படம் மூலம் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். ஆதித்ய வர்மா மற்றும் சுமோ படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சென்னை படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இவர் கொசுவலை போன்ற உடை அணிந்து ஓவர் கவர்ச்சி காட்டி எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “ஏனோதானோனு நிறைய படங்கள் பண்றதுல எனக்கு உடன்பாடு இல்லை. எது வொர்க் அவுட் ஆகும் ஆகாதுனு என்னால கணிக்க முடியுது. ஆரம்ப காலங்களில் சில காரணங்களுக்காக எனக்கு வரும் எல்லா படங்களுக்கும் ஓகே சொல்லியிருக்கேன்.

நான் எவ்ளோ இடைவெளி விட்டு படம் பண்ணாலும் மக்கள் என்னை என்கரேஜ் பண்றாங்க. அதை `எல்.கே.ஜி’ படத்துல உணர்ந்தேன். ரெண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, தமிழ்ல `எல்.கே.ஜி’ படத்துல நடிச்சேன். அதுக்கு எனக்கு கிடைச்ச வரவேற்பைப் பார்த்து தியேட்டர்ல கண்கலங்கிட்டேன். நிறைய பெரிய நடிகர்கள் கூட நடிச்சாத்தான் இந்த மாதிரி ரெஸ்பான்ஸ் இருக்கும். ஆனா,எனக்கு அது எதுவும் இல்லாமல் இந்தளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது ரொம்ப சந்தோசம். அடுத்தடுத்து நிறைய படங்கள் பண்ணாதான் ஹீரோயின்னு கிடையாது. பேமிலி ஆடியன்சுக்குப் பிடிக்கிற மாதிரி தரமான படங்கள்ல மட்டும்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றார்.