பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து இருந்தார். அந்த வகையில் விருதுநகர் மக்களவை தொகுதியில் கௌசிக் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் விருதுநகர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் கௌசிக் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் நடத்தும் அலுவலகம் சென்றார் அப்போது உறுதிமொழி வாசிக்க அறிவுத்தப்பட்டது. இந்நிலையில் வேட்பாளர் கௌசிக்கிற்கு தமிழ் படிக்கத் தெரியாததால் உறுதிமொழி முழுவதையும் விருதுநகர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் படிக்க, தொடர்ந்து படித்தார் நாம் தமிழர் வேட்பாளர் கௌசிக்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி கூறுகையில், வேட்பாளர் கௌசிக் ஓமன் நாட்டில் படித்ததால் தமிழ் படிக்கத் தெரியாது என விளக்கம் அறித்துள்ளனர். ஆனால், தமிழ் படிக்கத் தெரியாதவரை வேட்பாளராக்கி, தற்போது அதனை நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.