வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தொடர்பான பிரச்சினை இந்தி பட உலகில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தி பட உலகிற்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சதுரங்க வேட்டை, மிளகா உள்ளிட்ட படங்களில் நடித்த நட்டி நடராஜ் தமிழ் திரையுலகை பற்றி பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ் சினிமாவில், வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் இருக்கிறதா? இல்லையா? எனத் தெரியாது…, ஆனால், குரூப்பிசம் இருக்கிறது. யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க… யாருங்க நீங்க????… என்று டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.