தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கு கொடுமைகள் நடப்பதாக சமூக வலைதளங்களில் பொய்யான வதந்தியை பரப்பியதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழ்நாடு போலீசார் விசாரணை நடத்தி வதந்தி பரப்பியதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் 2 பேர் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தேடி வந்தனர்.
இந்த நிலையில் அதில் ஒருவர் நீதிமன்றத்தில், முன் ஜாமின் பெற்று விட்டார். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மற்றொருவரான மணீஷ் காஷ்யப் என்பவரை பீகார் மாநிலம் பாட்னாவில் தமிழ்நாடு தனி படை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு தனி படை போலீசார் மணீஷ் காஷ்யப்பை பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து விமானத்தில் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வநதனர். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை மாநகர காவல் ஆணையரக அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.