தமிழ்நாட்டிற்கு முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது – பிரதமர் மோடி பேச்சு
திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும். தமிழக அரசின் கோரிக்கைகள் அரசியல் முழக்கம் அல்ல, மக்களின் கோரிக்கைகள் என பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக நிகழ்ச்சி மேடையிலே பிரதமர் மோடி கூறியதாவது:-
தமிழ்நாட்டிற்கு முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மாநிலங்களின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு இதுவரை இல்லாத அளவுக்கு நிதி வழங்கி வருகிறது. மாநிலங்களுக்கு 10 ஆண்டுகளில் ரூ.120 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது என்று கூறினார்.