தமிழ்நாட்டின் சில பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழை – ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் 7 முதல் 11 செமீ அளவு வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதால், கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், “வருகிற 14, 15 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கிழக்கு ராஜஸ்தான், பீகார், அசாம், மேகாலயா, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹே ஆகிய மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும்.

வடமேற்கு இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 17 ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சண்டிகர் மற்றும் அரியானாவில் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று கிழக்கு ராஜஸ்தான் மீது அதிக தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது, ,” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools