X

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 72 மணி நேர பட்டினி போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்தது.

காலமுறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும், 52 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புதல், சத்துணவு மையங்கள் மூலம் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 72 மணி நேர போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. அமைச்சர் கீதா ஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தனர்.

Tags: tamil news