Tamilவிளையாட்டு

தமிழ்நாடுக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் – முதல் இன்னிங்சில் 226 ரன்களுக்கு சுடன் ஜார்க்கண்ட்

 

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கவுகாத்தியில் நடந்த ‘எப்’ பிரிவு ஆட்டத்தில் தமிழக அணி ஜார்க்கண்ட் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 285 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாபா இந்திரஜித் நிலைத்து நின்று விளையாடி சதமடித்தார். சாய்கிஷோர் 81 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஜார்க்கண்ட் அணி சார்பில் ராகுல் சுக்லா, சுஷாந்த் மிஸ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், அங்குல் ராய் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தமிழக அணி அசத்தலாக பந்து வீசியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உட்கார்ஷ் சிங் 52 ரன்னும், கேப்டன் சவுரப் திவாரி 58 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில், ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 226 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

தமிழகம் சார்பில் சித்தார்த் 4 விக்கெட்டும், ஷாருக் கான் 3 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 59 ரன்கள் முன்னிலையுடன் தமிழகம் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. 2ம் நாள் முடிவில் தமிழக அணி 2 விக்கெட்டுக்கு 15 ரன்கள் எடுத்து 74 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.