தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா

தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று
அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட
இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த
கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது.

தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் இக்கோவில் அமைந்திருக்கும் தஞ்சை மண்ணில் பிறந்த பலர்,
தமிழகத்திற்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு துறையில் பணியாற்றி வருகிறார்கள்.

அரசியல், கலை, சினிமா, தொழில்த்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தஞ்சை மண்ணை சேர்ந்தவர்கள்
வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள்.

இசைத் துறைக்கு எம்.கே. தியாகராஜ பாகவதரை கொடுத்த தஞ்சை, நடிப்புக்கு சிவாஜி கணேசனை கொடுத்தது. இவர்களை
தொடர்ந்து நடிகைகள் டி.ஆர்.ராஜகுமாரி, ஹேமாமாலினி என்று தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்தி சினிமாவிலும் வெற்றிக்
கொடி நாட்டிய இவர்களும் தஞ்சையை சேர்ந்தவர்கள் தான்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், நடிகர் ராஜேஷ், நடிகர் விஜயகுமார், இயக்குநர் ஷங்கர் என்று அக்காலம் முதல் இக்காலம்
வரை தமிழ் சினிமாவில் ஜாம்பவனாக திகழ்பவர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

தஞ்சை மண்ணில் பிறந்தவர்களுக்கு கலை என்பது ரத்தத்தில் கலந்த ஒன்றாகும். அதனால் தான் பிற துறையில்
ஈடுபட்டாலும், கலைத்துறையில் கால் வைத்துவிடுகிறார்கள். சமீபத்தில் கூட, தஞ்சையை சேர்ந்த தொழிலதிபரும், சமூக
ஆர்வலருமான துரை சுதாகார், என்பவர் ‘களவாணி 2’ மூலம் நடிகராக வில்லனாக அறிமுகமாகி பாராட்டு பெற்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools