தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்

தமிழக வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பெண்கள் மற்றும் இந்து மதம் குறித்து பேசியது சர்ச்சையாகியிருந்தது. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொன்முடியை துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார். ஆனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தோ, அமைச்சர் பதவியில் இருந்தோ நீக்கவில்லை.

பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஆளுநரை சந்திக்கிறார். அப்போது பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools