தமிழக பா.ஜ.கவின் 2ம் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு – விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் ஏற்கனவே வெளியானது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். இதேபோல், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா களம் காண்கிறார். புதுச்சேரி தொகுதியில் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். திருவள்ளூர் தொகுதியில் பொன்.பாலகணபதியும் , சென்னை வடக்கு தொகுதியில் பால் கனகராஜ் அவர்களும், திருவண்ணாமலை தொகுதியில் அஸ்வத்தாமன் அவர்களும், நாமக்கல் தொகுதியில் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகின்றனர்.

திருப்பூர் தொகுதியில் ஏ.பி.முருகானந்தமும், பொள்ளாச்சி தொகுதியில் வசந்தராஜனும், கரூர் தொகுதியில் செந்தில்நாதனும், தென்காசி தொகுதியில் ஜான்பாண்டியனும் போட்டியிடுகின்றனர். சிதம்பரம் தொகுதியில் கார்திகேயனியும், நாகப்பட்டினத்தில் எஸ்.ஜி.எம். ரமேஷ் அவர்களும், தஞ்சாவூர் பகுதியில் முருகானந்தம் அவர்களும் போட்டியிடுகின்றனர்.

திருச்சி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், மதுரை தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ். நந்தினி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவிய விஜயதாரணிக்கு இந்த தேர்தலில் பாஜக வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools