X

தமிழக சட்டசபை கூட்டம் இன்று முடிவடைந்தது

2022-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் நேற்று முன்தினம் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. நேற்று கவர்னர் உரை மீது உறுப்பினர்கள் விவாதம் நடந்தது. இன்று அந்த விவாதத்துக்கு பதில் அளித்தும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பேசினார்.

இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 15 சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் இன்று முடிவடைந்தது. மறுதேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு சட்டசபையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.