தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் 18 ஆம் தேதி கூடுகிறது
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வசம் 12-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அவர் குறிப்பிட்ட காலத்துக்குள் மசோதாக்களில் கையெழுத்து போட உத்தரவிடக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் 2 வாரங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியல் அமைப்பின் 200-வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை கவர்னர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது.
சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியல் அமைப்பின் 200-வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை கவர்னர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது கவர்னர்களின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பும் போது அதில் உடனுக்குடன் முடிவெடுக்க வேண்டியது தானே? ஏன் இந்த காலதாமதம்? கவர்னருக்கு சில அதிகாரங்கள் இருந்தாலும் மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குபவராக கவர்னர் இருக்க வேண்டும். அரசின் அதிகாரத்தை கவர்னர் கையில் எடுத்து கொள்ளக்கூடாது என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தது.
இந்த வழக்கு மீண்டும் வருகிற 20-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் கிடப்பில் வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.
அதில் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா உள்பட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் உள்ளன.
கவர்னரின் இந்த நடவடிக்கையால் மசோதாக்கள் விஷயத்தில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு இன்று அதிரடி முடிவு எடுத்து உள்ளது.
அதன்படி இந்த மசோதாக்களை மீண்டும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அதற்கு கவர்னர் முதலில் ஒப்புதல் அளிக்காமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி இருந்தார்.
அதன் பிறகு 2-வது முறையாக சட்டசபையில் அந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பிய போது வேறு வழியின்றி அந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். அதேபோல் இப்போது கவர்னர் திருப்பி அனுப்பி உள்ள 10 மசோதாக்களையும் தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) கூடுகிறது. இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு திருவண்ணாமலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு திருவண்ணாமலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் நிறைவேற்றப்படும். இறையாண்மை உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.