தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக ரமேஷ் சென்னிதலா நியமிக்க வாய்ப்பு!
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்த தினேஷ் குண்டு ராவ் கர்நாடக தேர்தலில் போட்டியிட்டு வென்று மந்திரியாகி விட்டார். எனவே தமிழக காங்கிரசுக்கு புதிய பொறுப்பாளர் விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் வெளியிட்டுள்ள பொறுப்பாளர்கள் பட்டியலில் தினேஷ் குண்டு ராவ் பெயர் இடம் பெறவில்லை. எனவே புதிய பொறுப்பாளர் நியமிக்கப்படுவது உறுதியாகிவிட்டது. புதிய பொறுப்பாளராக ரமேஷ் சென்னிதலா அல்லது சல்மான்குர்ஷித் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இருவரும் தமிழகத்தில் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் தான். ரமேஷ் சென்னிதலா பொறுப்பாளராக இருந்த போதுதான் தமிழ் மாநில காங்கிரசை காங்கிரசுடன் இணைத்தார். அதே போல் கட்சியில் பலர் இணைவதற்கும் காரணமாக இருந்தார். எனவே அவருக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.