X

தமிழக கவர்னர் டெல்லி சென்றார்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக பா.ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் நேற்று சந்தித்து பேசினார்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை வரை டெல்லியில் தங்கியிருந்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து கவர்னர் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.