தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக நியமனம். சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆக மகேஷ்வர் தயாள், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அமரேஷ் புஜாரி நியமனம்.

TANGEDCO நிறுவனத்தின் ஐ.ஜி. ஆக பிரமோத் குமார், மகளிருக்கு எதிரான குற்றப்பிரிவின் ஐ.ஜி.ஆக தமிழ்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) இணை ஆணையராக தர்மராஜன், கோவை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவின் எஸ்.பி. ஆக சந்திரசேகரன், மதுரை மாநகர துணை ஆணையராக பாலாஜி நியமனம்.

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஆக பிரதீப், சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ஆக சமய் சிங் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news