தமிழக எம்.பி-க்கள் 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரலுடன் முடிவடைகிறது

டெல்லி மேல்சபையில் (ராஜ்ய சபா) மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 12 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள்.

கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில சிறந்து விளங்குபவர்களை ஜனாதிபதி நியமிப்பார்.

இந்த 12 பேர்களை தவிர்த்து மற்றவர்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களால் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்கள் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

1. திருச்சி சிவா (தி.மு.க.)

2. டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு)

3. சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.) தற்போது இவர் பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.

4. விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.)

5. மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அ.தி.மு.க.)

6. முத்துகருப்பன் (அ.தி.மு.க.).

இந்த 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் நிறைவடைகிறது.

இதனால் 6 புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க இந்த மாதம் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதில் அ.தி.மு.க.வில் 3 எம்.பி.க்களும், தி.மு.க.வில் 3 எம்.பி.க்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டு இவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news