Tamilசெய்திகள்

தமிழக அரசு நாள் ஒன்றுக்கு ரூ.87.31 கோடி வட்டி கட்டுகிறது! – அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். 120 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது,

* தமிழக அரசு நாள் ஒன்றுக்கு ரூ.87.31 கோடி வட்டியாக மட்டும் செலுத்தி வருகிறது.

* பொதுத்துறை நிறுவனங்கள் முதலீட்டுக்காக வாங்கும் கடனுக்கு 8.08 சதவீதம் வட்டி வழங்குகிறது.

* கடன் வாங்கி செய்யப்படும் முதலீடுகள் மூலம் அரசு நிறுவனங்களுக்கு கிடைப்பது 0.45 சதவீத வருமானம்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.