தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கல்வி கொள்கையே உள்ளது. ஆங்கிலம் மற்றும் மாநில மொழியுடன் இந்தி மொழியையும் படிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா காலத்தில் இருந்தே இருமொழி கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழக அரசு உருவாக்கி உள்ள புதிய கல்வி கொள்கையிலும் இதுவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே கவர்னர், தமிழக அரசின் புதிய கல்வி கொள்கையை ஆதரிக்க வேண்டும். அவரது கருத்துக்கள் ஏதும் இருந்தாலும் சொல்ல வேண்டும். சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவது மாணவர்களின் நலனை பாதிக்கும். இருப்பினும் தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியான பிறகே கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
அரசியல் அமைப்பு பற்றி தெரியாமல் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கவர்னர் பற்றி கருத்து தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.