தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.
அப்போது 2017-ம் ஆண்டிற்கான விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அப்போது விருது வழங்கப்படவில்லை. விஜய் சேதுபதி மட்டுமின்றி பாடலாசிரியர் யுகபாரதியும் விருது விழாவுக்கு வரவில்லை.
இந்த நிலையில், நடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருதை இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் வழங்கியுள்ளார். அதேபோல், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோருக்கும் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.