தமிழக பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு வருபவர் அண்ணாமலை. அண்ணாமலைக்கு மாநில அரசால் ‘ஒய் பிளஸ்’ பிரிவு வழங்கப்பட்டு, பின்னர் அது ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக
குறைக்கப்பட்டது. அது குறித்து அண்ணாமலை தனது ஆட்சேபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாமலைக்கு நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த நபர் கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, சென்னையில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு அண்ணாமலைக்கு ‘ஒய்’பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அண்ணாமலைக்கு 2 தனி பாதுகாப்பு
அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதமேந்திய சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மற்றும் மாநில போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உள்ளனர். அண்ணாமலைக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு
அச்சுறுத்தலை ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.