Tamilசினிமா

தமிழகம் முழுவதும் நேரடியாக ரசிகர்களை சந்தித்த விஷால்! – எதிர்பார்ப்பில் ‘லத்தி’ திரைப்படம்

அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ‘லத்தி’ திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் நந்தா மற்றும் ரமணா இணைந்து தயாரித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘லத்தி’ படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வைரலான நிலையில், சென்னையில் டிரைலர் வெளீயீட்டு விழாவில் பங்கேற்ற விஷால், அன்றைய இரவு தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு படத்தின் விளம்பர பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கினார்.

திருச்சி, சேலம், மதுரை, கோவை என தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் நேரடியாக ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடிய விஷாலுக்கு ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பால் தற்போது ’லத்தி’ படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், தமிழகம் மட்டும் இன்றி மைசூர் உள்ளிட்ட பிற மாநில பகுதிகளுக்கும் சென்று ‘லத்தி’ படத்தை விஷால் விளம்பரம் செய்து வருவதால், கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம் போல் ‘லத்தி’ படமும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.