தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்! – ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அதிரடி திட்டம்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சரான எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சரான ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க.வின் நிலை அவ்வளவுதான் என்று பரவலாகவே பேசப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரு வரும் கட்சியின் பொறுப்புகளை பிரித்துக் கொண்டு ஒன்றிணைந்து கட்சி பணிகளை ஆற்றி வருகிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தளர்ந்து போகாமல் கட்சியினரை ஒருங்கிணைத்து சட்டமன்ற இடைத்தேர்தலை சந்தித்தனர். இதில் வெற்றியும் பெற்றனர்.
அதே நேரத்தில் நடந்து முடிந்த கிராமப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுக்கு இணையாக அ.தி.மு.க.வை வெற்றி பெறவும் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி, நகராட்சி தேர்தலை சந்திக்கவும், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும் இருவரும் தயாராகி வருகிறார்கள்.
இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினர். கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணி பற்றியும், நடைபெற உள்ள தேர்தலை எதிர் கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “அனைவரும் ஒன்றிணைந்து வருகிற தேர்தல்களில் வெற்றியை ஈட்ட வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கிய ஆலோசனைகள் விரைவில் செயல்படுத்தப்படும்” என்றும் தெரிவித்தனர்.
இது அ.தி.மு.க.வினர் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் அதனை எதிர்கொள்ள இப்போதே தயாராக வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக கட்சியினரை ஊக்கப்படுத்துவதற்காக விரைவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த பயணத்தின்போது அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகளில் இருந்து அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரது கருத்துக் களையும் கேட்பதற்கு முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஆலோ சனைக் கூட்டங்களையும் நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் கட்சியினருக்கு வெற்றியை ஈட்டும் வகையில் செயல்படுவதற்காக பல் வேறு அறிவுரைகளையும் இருவரும் வழங்குகிறார்கள்.
ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க.வில் இருந்து பலரை தன் பக்கம் தினகரன் இழுத்து சென்றார். அம்மா முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியையும் அவர் நடத்தி வருகிறார். தினகரன் கட்சியில் இருந்த பலர் அங்கிருந்து அ.தி. மு.க.வில் மீண்டும் சேர்ந் துள்ளனர்.
இது போன்று கட்சிக்கு மீண்டும் வந்தவர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் கோஷ்டி பூசலுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டும் என்றும் இந்த கூட் டத்தின்போது அறிவுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை அவரது மறைவுக்கு பிறகு மிகவும் வலுவான இயக்கமாக மாற்றி காட்டியவர் ஜெயலலிதா. அவரது 72-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டா டப்பட்டது.
இந்த விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக நலத் திட்ட உதவிகளை வழங்கி அ.தி.மு.க.வினர் கொண் டாடினார்கள். வரும் காலத்தில் அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தேடித்தரும் வகையில் செயல்படுவோம் என்று அ.தி.மு.க.வினர் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.
ஜெயலலிதா பிறந்த நாளை “பெண்கள் பாதுகாப்பு தினமாக” முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஜெயலலிதா பெயரில் பல்வேறு பணிகளையும் அவர் செயல்படுத்தி வருகிறார். சென்னை போலீசில் “அம்மா ரோந்து வாகனம்” பிரிவும் செயல்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக இந்த புதிய பாதுகாப்பு வசதி சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோரை முன் நிறுத்தியே பிரசாரம் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் முடிவு செய்து இருக்கிறார்கள்.
தேர்தல் நெருங்கும் நேரத் தில் கட்சியினர் அனை வரையும் மேலும் ஒருங் கிணைக்கும் வகையில் வேகமாக செயல்பட வும் இருவரும் திட்டமிட்டுள்ளனர்.