சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரி கடல் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரையிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வை பொறுத்து மழை வலுப்பெறுமா? என்பது தெரியவரும்.
சென்னையை பொறுத்தமட்டில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.