தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 80 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 16-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் நேற்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 252.3 மி.மீ. அளவுக்கு மழை இயல்பாக பதிவாகவேண்டும். ஆனால் இயல்பான அளவையும் தாண்டி 455.2 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இது 80 சதவீதம் அதிக மழைப்பொழிவு ஆகும்.