தமிழகத்தில் 86 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர் – அமைச்சர் தகவல்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 81சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். 2-வது தவணை தடுப்பூசி 51சதவீதம் பேர் போட்டுள்ளார்கள். தேசிய சராசரி 53 சதவீதம்.அதை விரைவில் நெருங்கி விடுவோம்.

எல்லோரும் தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கட்டாயப் படுத்தாமல் ஒவ்வொரு வரையும் நிலைமையை புரிந்து கொள்ளும்படி விளக்கி வருகிறோம். ஆங்காங்கே அதிகாரிகள் ஊசி போடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

டாஸ்மாக்குக்கு செல்பவர்கள் கட்டாயம் ஊசி போட்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 50 லட்சம் பேரை கண்டிப்பாக ஊசிபோட வைக்க முடியும். அதேபோல் கல்லூரிக்கு வருகின்ற மாணவர்களுக்கும் கட்டாயம் ஊசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் எல்லோரையும் ஊசி போட வைப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் செய்து வருகிறோம். ஒமைக்ரான் வைரஸ் முந்தைய கொரோனா வைரசை விட பல மடங்கு வேகமாக பரவுகிறது. நமது மாநிலத்தில் இதுவரை எதுவும் வரவில்லை. அதே நேரம் மற்ற மாநிலங்களில் பரவத் தொடங்கியிருக்கிறது. இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்த நெருக்கடியான சூழலில் எல்லோரும் 2 தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்வது மட்டும்தான் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தவிர்க்க முடியும் என்பதை உணர்ந்து அனைவரும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools