X

தமிழகத்தில் 8 சிறப்பு ரெயில்கல் ரத்து – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கொரோனா 2-வது அலை தற்போது அதிகமாகி வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதன் காரணமாக பயணிகள் வருகை குறைந்து வருகிறது.

இதையடுத்து சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதுவரை 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 8 ரெயில்கள் ரத்து செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்ட்ரல்-ஆலப்புழாவுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில் (02639), மங்களூர் சென்ட்ரல்-திருவனந்தபுரத்துக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06630), எர்ணாகுளம் சந்திப்பு-காரைக்காலுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06188), மதுரை-புனலூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06729), ஆகிய 4 சிறப்பு ரெயில்கள் இன்று முதல் 31-ந்தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆலப்புழா-சென்னை சென்ட்ரலுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில் (02640), திருவனந்தபுரம்- மங்களூர் சென்ட்ரலுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06629), காரைக்கால் – எர்ணாகுளம் சந்திப்புக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06187), புனலூர்- மதுரைக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06730) ஆகிய சிறப்பு ரெயில்கள் மே 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.