தமிழகத்தில் 5 நாட்களுக்கு கன மழை தொடரும்

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. நகர்ப்புறங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கான மழை நிலவரம் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழகத்தை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக கனமழை நீடிக்கும்.

இதேபோல் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news