தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவின்படி, சிறு குறு, நடுத்தர தொழில் துறை செயலாளராக அர்ச்சனா பட்நாய்க் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்துறை ஆணையராக நிர்மல்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையராக ஹர் சகாய் மீனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.