Tamilசெய்திகள்

தமிழகத்தில் 18 ஆம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் அதிகட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக, வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், இந்தியாவில் பல மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் வெப்ப அலையும் வீசுகிறது.

நேற்று அதிகபட்சமாக ராஜஸ்தானில் 111 டிகிரி வெயில் அடித்தது. இந்த நிலையில் டெல்லி மற்றும் வடமாநிலங்களில் வருகிற 18-ந்தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.