X

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – ஓ.பன்னிர் செல்வம்

தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. வேட்பாளர்களை பொதுமக்கள் வெகுவாக ஆதரித்து வருகிறார்கள்.

அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. அனைத்து துறைகளிலும் ஒட்டு மொத்தமாக பொது நிர்வாகத்தில் தமிழக அரசு முதலிடம் வகிக்கிறது.

இதன் மூலம் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசின் நல்லாட்சி நடைபெற்று வருவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: south news