X

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

ஒரு புறம் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என தொடர மறுபுறம் தலைவர்கள் பிரசாரத்தில் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதேபோல தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்தும் வகையிலும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் ராகுல்காந்தி எம்.பி. களமிறங்கி உள்ளார். பொங்கல் பண்டிகையன்று மதுரை அவனியாபுரம் வந்த அவர் அங்கு நடந்த ஜல்லிக்கட்டை பார்வையிட்டார். மேலும் பொதுமக்களோடு ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

அதன் அடுத்தகட்டமாக கொங்கு மண்டல வாக்குகளை குறிவைத்து ராகுல்காந்தி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய உள்ளார்.

இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக 3 நாள் பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று கோவை வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடங்கினார். அவர் கூறியதாவது:

தமிழகத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. தமிழகத்திற்கு வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று.

ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற முயற்சியை எதிர்த்து நாம் போராட வேண்டி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.