Tamilசினிமா

தமிழகத்தில் திரையரங்கங்கள் மீண்டும் திறப்பு – வெளியாகும் புது பட பட்டியல்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து திரையரங்குகள் மூடப்பட்டது. இதையடுத்து கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை நாளை முதல் மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதால், புதுப்படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. நாளை திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் ஒரு வார காலத்திற்கு பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் இறுதி வாரத்தில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து புதிய படங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ஜெயில்’, சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர் மகன்’ மற்றும் ரியோ நடித்துள்ள ‘பிளான் பண்ணி பண்ணனும்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.