தமிழகத்தில் திட்டமிட்டபடி 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி திருப்புதல் தேர்வு!

தமிழகத்தில் ஜனவரி 19-ம் தேதி திட்டமிட்டபடி 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் ஜனவரி 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையும் நடைபெறும் என கடந்த டிசம்பர் மாதம் தேர்வுத்துறை அறிவித்தது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திருப்புதல் தேர்வு ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி 10 மற்றும் 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மே மாதத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால்,  திருப்புதல் தேர்வு மதிப்பெண்களை மதிப்பீடாக எடுக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools