X

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4.6 சதவீதமாக சரிந்தது

தமிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி தொற்று 4.6 சதவீதமாக சரிந்துவிட்டது. இந்த மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 26 ஆயிரத்துக்கு மேல் இருந்தது. அதே போல் பலி எண்ணிக்கையும் 490 வரை சென்றது.

தற்போது தினசரி பாதிப்பு 6 ஆயிரத்து 596 ஆக குறைந்துள்ளது. அதே போல் பலி எண்ணிக்கையும் 166 ஆக குறைந்துள்ளது. மேலும் சென்னையிலும் 7 ஆயிரத்துக்கு மேல் பதிவான தினசரி பாதிப்பு இப்போது 396 ஆக குறைந்து இருக்கிறது.

பலி எண்ணிக்கையும் 20 ஆக குறைந்துள்ளது. கடந்த 16-ந் தேதி வரை தினசரி பாதிப்பு 6.1 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு ஒரு வாரத்தில் 4.6 ஆக இருக்கிறது.

கோவையில்-793, ஈரோடு-686, சென்னை-396, சேலம்-472, திருச்சி-247, மதுரை-120 என்று தொற்று உறுதியாகி இருக்கிறது. 17 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை நூறுக்கு கீழ் குறைந்துள்ளது.

தென்காசி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 50-க்கு கீழ் குறைவானது. தொற்று நிலையான விகிதத்தில் குறைந்து வருகிறது.

அதே நேரம் தடுப்பூசிகளும், அதிக எண்ணிக்கையில் போடப்பட்டு வருகிறது. பொது மக்களும் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்வது பேன்ற விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.