Tamilசெய்திகள்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த டிசம்பா் 19-ம் தேதி தொடங்கி ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேரும் என மொத்தம் 40,288 போ் விண்ணப்பித்தனர்.

இதை தொடர்ந்து விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தரவரிசைப் பட்டியலை https://www.tnhealth.tn.gov.in/https://tnmedicalselection.net/ ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் சென்று காணலாம்.

அகில இந்திய ஒதுக்கீடு போக, தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 4,349 இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 2,650 இடங்கள் என மொத்தம் 6,999 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன.

இதில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 436 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பிடிஎஸ் படிப்பில் உள்ள 1,930 இடங்கள் உள்ளன. அதில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 98 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.