X

தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அலை தான் வீசுகிறது! – அமைச்சர் ஜெயக்குமார்

பாரத பிரதமர் மோடி மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை மதுரை வந்தடைந்தார்.

அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் “தமிழகத்தை பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா அலைதான் வீசுகிறது. மக்களின் நலன்கருதி அதிமுக தலைமையை ஏற்று வரும் கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொள்வோம். முதல்வர் பழனிச்சாமி தமிழகத்திற்கான திட்டங்களை பிரதமர் மோடியிடம் போராடி பெற்று வருகிறார்” என்றார்.