தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (19-ந் தேதி) மற்றும் 20-ந்தேதி ஆகிய இரு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் மற்றும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் லேசான மழை பெய்தது. புறநகர் பகுதியிலும் கொட்டியது. குளிர்ந்த காற்றும், மழை தூறலும் காணப்பட்டது.
மீனம்பாக்கத்தில் 3.9 மி.மீ., நுங்கம்பாக்கம் 2.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.